The Karamadai devotees heard with rapt attention not only the vibrant bhajans but also a brief talk on the subject of kainkaryam to the Divine at three levels - physical, manasika and vachaka. It was followed by the rendition of the ever popular Ranga Ranga and meditation. When the audience was visualising Him in their hearts, the utsav murthis made their appearance alongside the mandap area itself!
Saturday, January 7, 2012
The Karamadai Kainkaryam
The Karamadai devotees heard with rapt attention not only the vibrant bhajans but also a brief talk on the subject of kainkaryam to the Divine at three levels - physical, manasika and vachaka. It was followed by the rendition of the ever popular Ranga Ranga and meditation. When the audience was visualising Him in their hearts, the utsav murthis made their appearance alongside the mandap area itself!
Wednesday, January 4, 2012
ஞானம், த்யானம், கானம் மற்றும் குற்றால ஸ்னானம்
சமீபத்தில்
முது நிலை த்யான பயிற்சிக்காக குற்றாலம் சென்ற போது, அங்கிருந்த வானர (குரங்கு) கூட்டம் எங்களை அன்புடன் வரவேற்றது. நீண்ட இடைவெளிக்குப்பின், நண்பர்களை சந்தித்த ஓர் ஆனந்தம்!
முதல் நாளன்று மெளன சுவாமிகள் மடத்தை சேர்ந்த சித்தேஸ்வரி பீடம் கோயிலில் நடை பெற்ற சத்சங்கம் மிக அற்புதம். விநாயகர் முதல்
ஆஞ்சநேயர் வரை சுமார் பத்து சன்னதிகள் இக்கோயிலில் உள்ளன. மேலும் சுவாமிகளின் மஹா சமாதியும் உள்ளது.
இந்த கோயிலில் உள்ள விநாயகரின் பெயர் 'நாடி விநாயகர்'. பல ஆண்டுகளுக்கு முன்
இவரது கண்ணில் நீர் வந்ததாகவும்,
அப்போது அவரை ஒரு மருத்துவர்
பரிசித்து, விநாயகருக்கு நாடி துடித்து ஜுரம்
அடிப்பதாக கண்டு பிடித்ததாகவும் உள்ளூர்
மக்கள் கூறுகிறார்கள். அந்த விநாயகரை பார்த்த
எனக்கும் நாடி துடித்தது.
மாலையில்
நீர் வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து சுமாராகத்தான்
இருந்தது.
வெள்ளிக்கிழமை
அன்று இலஞ்சி குமரன் (முருகன்)
கோயிலில் சத்சங்கம். சுவாமிமலையில் முருகன் சந்தன காப்புடன்
இருக்கும் போது குமாரனாகவும், விபூதி
காப்புடன் இருக்கும் போது கிழவராகவும் தோற்றம் அளிப்பார். இந்த கோயிலில் முருகன்
விபூதி காப்பில் இளம் குமாரனாக காட்சி
அளித்தார். மெய்சிலிர்க்க நடந்த இந்த சத்சங்க
நிகழ்ச்சிக்கு பிறகு இரவில் கடும்
மழை. ஆனால் மறு நாள்
காலை மழை முழுவதுமாக நின்று,
நீர்வீழ்ச்சியில் வரத்து அதிகரித்தது. எங்களுக்காக
பிரத்யேகமாக மழை பெய்தது போல்
ஓர் உற்சாகம்.
மத்யமாவதி
ராகத்தில் 'சௌபாக்ய லக்ஷ்மி வாரம்மா'
என்ற பாடல் மிகவும் அற்புதம்.
சத்சங்கத்தில் பக்க வாத்யம் வாசித்த
கிருஸ்துவ நண்பர்களிடமும் 'சரஸ்வதி கடாக்ஷம்' நன்றாக
தெரிந்தது. கலைவாணி, ஜாதி மதம் பார்ப்பது
இல்லை போலும்.
டிசம்பர்
31 இரவு 12 மணிக்கும் மேலாக நடை பெற்ற
சத்சங்கம் ஒரு திருவிழா போல்
அமைந்தது. சங்கரன் கோயிலில் இருந்து வந்த வாழும் கலை
நண்பர்கள் / நண்பிகள் பிரம்மாண்டமாக பூக்கோலம் வரைந்தனர். வழக்கமாக அளிக்கும் பக்திப் பாடல்களுடன், கதைகளையும்,
நகைச்சுவையையும் அருண்ஜி வழங்கியதில் சிரித்து சிரித்து பலர் வயிறு வலித்து
போனார்கள்.
நீண்ட இடைவேளைக்குப்பின், நிறைய இளைஞர்கள் இந்த
த்யான முகாமில் பங்கு பெற்றது ஒரு
மன நிறைவான விஷயம். மிகவும்
கடினமான யோக வசிஷ்டா-வை
அருண்ஜி அவர்கள் மிக எளிமையாக
கையாண்டதை கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டு போனோம். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை
மிக சிறப்பாய் செய்திருந்த திரு அசோகன்ஜியை பலரும் பாராட்டினர்.
சென்னை
திரும்பியவுடன், காசு கொடுத்து கடையில்
தண்ணீர் வாங்கிய போது, குற்றாலத்தில்
அருந்திய பதநீரும், நுங்கும் நினைவிற்கு வந்தது.
அன்புடன்
இரவிச்சந்திரன்
முத்துதீஷதர்
94449 04644
Subscribe to:
Posts (Atom)