Monday, November 28, 2016

4th Convocation - Sri Sri Gurukul

27 November 2016




Felicitation to  Sivagama Vidyanidhis - an extract:

“Convocation ceremony today would be incomplete without a special mention of the sacrifice of your parents. They dedicated you in the path of Vedic wisdom, the path of simple living and high thinking, amidst temptations of other career options. It would be befitting to remind you that Visalakshi Mandap, the symbol of AOL International Centre, is in itself a grateful tribute to our Founder’s mother.

Contrast this with other students who by and large have no knowledge of brahmacharya - self-control. Caught up in trends and fashions, undesirable food, bad company, cinema houses, all of which rob them of vitality. The Gurukul has shaped you well in the path of sadachara and moulded your character. Your true success in life depends entirely upon the formation of your character.

When you begin the new journey, remember that you are torch bearers to spread vedic wisdom in every nook and corner. 

धर्मो रक्षति रक्षितः  

Our blessings to you all. "

நான்காவது பட்டமளிப்பு விழா -- ஸ்ரீ ஸ்ரீ குருகுலம் --27 நவம்பர் 2016
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்  டிரஸ்ட் அறங்காவலர் டாக்டர் .அருண் மாதவன்  அவர்களின் வாழ்த்துரை 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

       பட்டமளிப்பு விழாவின் இந்த நன்நாளில் உங்களுடைய பெற்றோர்கள் செய்த சிறந்த தியாகத்தை  பற்றி கூறாமல் விழா முழுமையடையாது .இன்று உயர்ந்த சம்பாத்தியம் அளிக்கக்கூடிய எத்தனையோ துறைகள் இருந்தும் உங்களுடைய பெற்றோர்கள் வேத ஞானம் , எளிய வாழ்க்கை முறை மற்றும் உயர்ந்த எண்ணங்கள் கொண்ட இந்த ​குருகுல ​கல்வி முறையில் உங்களை அர்ப்பணித்து இருக்கிறார்கள்.அவர்களுடைய இந்த  உயர்ந்த தியாகமும் உங்களுடைய சுய முயற்சியும் சேர்ந்து உங்களை உன்னதமான யாகத்திற்கு தகுதி உடையவர்களாக ஆக்கியிருக்கிறது .இன்று வாழும் கலை பன்னாட்டு மைய்ய​த்தின் சின்னமாகத்  திகழும் இந்த விசாலாக்ஷி மண்டபம் நமது ஸ்தாபகரின் தாயாருக்கு நன்றி கலந்த சமர்ப்பணமாகும் என்பது  மிகையாகாது.

       இன்று மற்ற பெரும்பாலான மாணவர்களுக்கு ப்ரஹ்மசர்யம் பற்றிய  ஞானம் கிடையாது. மேலும் அவர்கள் நவநாகரீகம் , தேவையற்ற உணவு, தவறான சேர்க்கை , சினிமா ஆகியவற்றில் அதிகப்படி ஈடுபடுவதால் ஷக்தி, பலமிழந்தவர்களாக இருக்கிறார்கள் .

        உங்களுடைய தலைமை ஆசிரியர் மற்றும் துணை ஆசிரியர்கள் மூலம் உங்களை வந்தடையும் பூஜ்ய ​   ​குருதே​வரின் ​ எல்லையற்ற கருணையும் ஞானமும் உங்களை நல்வழிப்பாதையில் இட்டுச்செல்கிறது​.​ உங்களது வாழ்க்கையின் உண்மையான வெற்றி என்பது உங்களுடைய நன்னடத்தையை பொறுத்தே அமையும். உலகின் மிக உயர்ந்த மனிதர்கள் எல்லோரும் உயர்வை அடைந்ததற்கான காரணம்​,​ உயர்குணமும் நன்னடத்தையும்  மட்டுமேயாகும். தன்னடக்கம், சுய கட்டுப்பாடு, கீழ்ப்படிதல், சேவை மனப்பான்மை,மற்றும் ஆத்ம ஞானத்தை அடையும் எண்ணம் ஆகியனவை இன்று நீங்கள் ஸ்ரீ ஸ்ரீ குருகுலத்திலிருந்து எடுத்துச்செல்லக்கூடிய போற்றுதலுக்குரிய பொக்கிஷங்கள் ஆகும் .

         புதிய வாழ்க்கையை துவங்கும் இத்தருவாயில் நீங்கள் வேத ஞானத்தை உலகின் ஒவ்வொரு மூலையிலும் எடுத்துச்செல்லும் வழிகாட்டியாக விளங்குகிறீர்கள் என்பதை மறவாதீர்கள். அதுவே நீங்கள் செய்யக்கூடிய தர்மமாகும். 'தர்மோ ரக்ஷதி ரக்ஷிதஹ '. , ' தர்மம் தலை காக்கும் '.

 ஜெய் குருதேவ்.  
      

​அருண்ஜி ​























Monday, November 14, 2016

Serendib





Pleasant surprise:10-13 November,2016

Srilanka is fondly hailed as Serendib. The name has its roots in Sanskrit - Siṃhaladvīpa: Island -Dwelling Place of Lions. The word gained currency in English as ‘serendipity’ from the 18th Century Persian fairy tale, “The Three Princes of Serendip,” where the heroes often made discoveries by chance- as pleasant surprises!

It was indeed Serendipity that participants from across the four corners and central province of the Island turned up in large numbers at the Special Advanced Meditation program at Colombo. 

Great team work and an enriching experience for all.