Wednesday, October 7, 2009

ஸ்ரீ அருண் ஜி அவர்களின் "அர்த்தமுள்ள சம்ப்ரதாயங்கள்".

வணக்கம்
ஜெய் குருதேவ்.

நாம் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்களையும், மரபுகளையும் பற்றி கூற பல நூல்கள் இருந்தாலும், அதற்கான காரணங்களை பற்றி கூற சில நூல்களே உள்ளன. அந்த வகையில் ஒரு சிறந்த book தான் ஸ்ரீ அருண் ஜி அவர்களின் "அர்த்தமுள்ள சம்ப்ரதாயங்கள்". நாம் நம் வாழ்கையில் பல மரபுகளை நமது முன்னோர்கள் கூறியதால், "ஏன்" என்ற கேள்வியே கேட்காமல் கண்ணை மூடிக்கொண்டு ஒரு குருடனை போல கடைப்பிடிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. இதில் மிக வருத்தமான விஷயம் என்னவென்றால் பல கோயில் அர்ச்சகர்களுக்கும், நமது வீட்டிற்கு வரும் ப்ரோகிதர் களுக்குமே இந்து மதத்தில் புதைந்து கிடக்கும் பல உண்மைகள் தெரிவதில்லை என்பதுதான். இவற்றிற்கு பதில் தரும் நூல்தான் "அர்த்தமுள்ள சம்ப்ரதாயங்கள்".

இந்த ஒரு அற்புதமான புஸ்தகத்தை நாம் படிப்பதுடன், நம் வீட்டிற்கு வரும் பெண்டிற்கு ஒரு அன்பு பரிசாக அளிக்கலாம். அளிக்கவும் வேண்டும். நம் மதத்தில் உள்ள அற்புதமான செய்திகளை நாம் மற்றவர்களுக்கு கூறாமல் வேறு யார் கூறுவார்கள்? சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். நமது வீடுகளில் நடக்கும் சிறு சிறு கொண்டாடங்களின் போது பெண்டிற்கு அளிக்க படும் ரவிக்கை துணிகள் எங்கு செல்கின்றன என்று யோசித்து பாருங்கள். அதற்கு பதிலாக இந்த நூலை அளிக்கலாம் என்ற முடிவிற்கு நீங்களாகவே வருவிர்கள். பொருள்களை விட Knowledge அளிப்பதே சிறந்தது என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. தசரதரை விட ஜனகர் அதிகம் பாராட்ட படுவதற்கு காரணம் ஞானமதான். (வீட்டில் இருக்கும் கடவுள்களின் படங்களை சென்று பாருங்கள். துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகியோரின் புடவைகள் தமஸ், ராஜச மற்றும் சாத்த்விக் குணத்தை குறிக்க சிவப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தில் இருந்தாலும் "matching blouse concept" இல்லை! இது சீதை மற்றும் ராதாவிற்கும் பொருந்தும்). பகவத் கீதையில் கிருஷ்ணர் பொருள் அளிப்பதை விட knowlege அளிப்பது சிறந்தது என்கிறார். In fact, He says giving knowledge is a better sacrifice than giving material or emotional support! பல பாரதியார் பாடல்களில் ஞானத்தின் முக்கயத்துவம் பற்றி நாம் படிக்கலாம்.

நான் உடனடியாக எனக்கு தெரிந்த அர்ச்சகர்களுக்கும், புரோகிதர்களுக்கும் இந்த புஸ்தகத்தை இலவசமாக அளிக்க போகிறேன். என் மனைவி என் வீட்டிற்கு வரும் பெண்டிற்கு 'அர்த்தமுள்ள சம்ப்ரதாயம்' அளிக்க போகிறாள். நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?

என்னிடம் சில புஸ்தகங்கள் உள்ளன. வேண்டுவோர் தொடர்பு கொள்ளலாம். நன்கொடை Rs. 70/-

அன்புடன்
இரவிச்சந்திரன் முத்து தீஷதர்
94449 04644

No comments:

Post a Comment