ஜெய் குருதேவ்.
திரு. அருண்-ஜி அவர்களுடன் நடை பெற்ற முதுநிலை த்யான முகாம் குர்றாலம் நகரில் இனிதே நிறைவடைந்தது. 31.12.2009 இல் 'ஓம் கண நாதா' என்ற விநாயகர் பாடலுடன் தொடங்கிய சத்சங் 3.1.2010 சனி கிழமையன்று 'வெற்றிலையில மாலை கட்டுங்க' என்ற ஆஞ்சநேயர் பாடலுடன் முடிவடைந்தது. நீண்ட இடை வெளிக்கு பிறகு பெரும்பாலான தமிழ் பாடல்கள் கொண்ட சத்சங், மனதை நிரப்பி ஓர் இனிய அனுபவம் தந்தது. மேலும், வாழ்க்கையை பற்றிய ஒரு கிராமிய பாடலை பல முறை மீண்டும் மீண்டும் பாட சொல்லி அனைவரும் ரசித்தனர்.
குருஜியின் படத்தினை சுற்றி பூக்களால் புதிய வருட கொண்டாட்டத்திற்காக செய்யப்பட்ட அலங்காரத்தினை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. சுமார் 170 க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்ற புத்தாண்டு நிகழ்ச்சியில், அனைவரும் கையில் தீபம் ஏந்தி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். அறியாமை எனும் இருளை ஞானம் எனும் ஒளியினால் அகற்ற இந்த தீப நிகழ்ச்சி ஓர் ஏற்பாடு. நான்கு நாட்களும் ஞான அருவியில் அனைவரும் குளித்ததை நன்றாக உணர முடிந்தது.
"நாராயண" என்ற சொல்லில் இருந்து "ரா" என்ற எழுத்தையும், "நமசிவாய" என்ற சொல்லில் இருந்து "மா" என்ற எழுத்தையும் எடுத்து "ராம" என்ற நாமம் ஏற்பட்டதாக அருண் ஜி கூறிய போது ஒரு சில குரங்குகள், பூனையை போல சப்தம் இல்லாமல், அரங்கினுள் நுழைந்தன. இதை பார்த்த ஒரு சிலர் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
நிகழ்சிக்காக அசோகன் ஜி செய்திருந்த ஏற்பாடுகள் பிரமாதம். நான் சென்னை திரும்பிய போது என்னுடன் ரயிலில் பயணித்த பீகாரை சேர்ந்த, தமிழ் தெரியாத நண்பர் திரு. பாண்டே, தான் பங்கு பெற்ற பத்தாவது AMC இது எனவும், மற்ற ஒன்பது AMC யிலும் கிடைக்காத ஒரு புதிய அனுபவம் தனக்கு தற்போது கிடைத்ததாகவும் தெரிவித்தார். தமிழே தெரியாத இந்த நண்பர் " விஷமக்கார கண்ணன்" பாடலை ஹம் செய்து வந்தார். முதல் நாள் முதல், தூக்கத்திலும் இந்த பாடல் காதில் ஒலிப்பதாக கூறிய அவர் "விஷமக்காரன்" என்றால் என்ன? என்று வினவினார். "Naughty" என்று பதிலளித்து naughty-யாக சிரித்தேன் நான்.
அன்புடன்
இரவிச்சந்திரன் முத்துதீஷதர்
94449 04644
பிற்குறிப்பு: AMC யுடன் ஒப்பிடும் போது, அந்த ஊர் அருவியை பற்றி எழுத ஏனோ மனம் இடம் தரவில்லை
No comments:
Post a Comment