வனத்துக்குள் திருப்பூர் சுந்தர திருப்பூர்
In the green, is the adorable Tiruppur
நடுவது வெற்றுச் செடியல்ல, இதுவே எங்கள் எதிர்காலம்
What we plant is not a mere sapling, but our very future
காண்பது பகல் கனவல்ல, திருப்பூர் நினைத்தால் நிஜமாகும்
Not a day dream, a vision of Tiruppur soon to become a
reality
செடிகள் வளர்ந்து மரங்களாகும், இலைகள் விழுந்து உரங்களாகும்
The little sprouts will grow into lush greenery; their leaves
shall manure the offsprings
மலர்கள் காலடி தடங்களாகும் பறவைகள் தங்கும் வனங்களாகும்
Pathways strewn with flowers, a veritable haven for birds
இணைந்திட வேண்டும் லட்சம் கரங்கள், வளர்த்திட வேண்டும் லட்சம் மரங்கள்//
Let thousands of hands join together and nurture a
massive green force
பெரியவர் சிறியவர் பேதமில்லாமல் பெண்களும் ஆண்களும் சேர்ந்துழைத்தால்
When this community of ceaseless crusaders rise above age and
gender differences
சிந்திடும் வியர்வையின் ஒவ் வொருமுத்தும் மலராய் கனியாய் மரங்களில் சிரிக்கும்//
Each ounce of our effort will beam with bliss in the flowers and
fruits of elegant trees.
மழை வளம் ஓங்க நீர்வளம் ஓங்க, சுவாசக் காற்றில் மலர்மணம் கூட
When we ask for a raise in rain and reserves of water
When we ask for fragrant flowers to fill the air with aroma
அன்னை நம்மை கேட்கின்றாள், நெய்து தருவோம் பசுமைப் போர்வை
Mother Nature is asking us the resource for the same: a green
blanket
Let’s weave it for her.
Listen to the song sung by Dr. Arunji
No comments:
Post a Comment