Tuesday, January 14, 2014

நீங்கள் யாரிடம் எப்படி பேசவேண்டும், தெரியுமா?


தாயிடம் அன்பாகப் பேச வேண்டும்; தந்தையிடம் பண்பாகப் பேச வேண்டும்;  மனைவியிடம்  உண்மையைப் பேச வேண் டும்; சகோதரியிடம் பாசமாகப் பேச வேண்டும்; சகோதர(ன்)னிடம் அளவாகப் பேச வேண்டும்; குழந்தையிடம் செல்லமாக பேச வேண்டும்; உறவினரிடம் பரிவாக பேச வேண்டும்; நண்பர்களிடம் உரிமையோடு பேச வேண்டு ம்; வியாபாரியிடம் கறாராக பேச வேண்டும்; வாடிக்கையாளரிடம் நேர்மையாக பேச வேண்டும்; அரசியல்வாதியிடம் மட்டும் ஜாக்கிரதையாக பேச வேண்டும்; கடவுளிடம் அல்ல‍து உங்கள் மனசாட்சியிடம் மவுனமாக பேச வேண்டும்;

யாரிடம் எப்ப‍டி பேசினாலும் அவர்களையும், விஷயத்தையும் புரிந்து பேச வேண்டும்.புரியும்படி பேச வேண்டும் வாழ்வதற்காக பேச வேண்டும்! வாழ்க்கையைப் பற்றிப் பேச வேண்டும்! வாழவைக்க பேச வேண்டும்! வாழும்போதே பேச வேண்டும்! இப்ப‍டி பேசினால்தான், நல்ல‍வர்களின் ஆதரவும், வாழ்க்கையில் வெற்றியும் உங்களோடு பேசி விளையாடும் ...

No comments:

Post a Comment