"ராதையின் நெஞ்சம், எனக்கும் சொந்தம்"
ராதே ராதே
பொதுவாக ஜெய் குருதேவ் எனத் தொடங்கும் எனது "அனுபவ கட்டுரைகள்", ராதே ராதே என ஆரம்பிப்பது சமீபத்தில் நிறைவடைந்த அருண் ஜி அவர்களுடான பிருந்தாவன் முதுநிலை த்யான முகாமின் தாக்கம். கிருஷ்ணர் பிறந்த பூமியையும், ராதை பிறந்த 'பர்சானா' என்ற ஒரு கிராமத்தையும் அருண் ஜி அவர்களின் விளக்கங்களுடன் கண்டு களித்ததும், அங்கு நடை பெற்ற சத்சங் - இல் பங்கு பெற்றதும் வாழ்நாள் முழுவதும் மனதில் நிற்கக்கூடியவை. இதை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. ராதை-இன் கோயிலில் சத்சங் முடிந்து திரும்பிய் போது வழியில் இருந்த சிறு சிறு பெட்டிக்கடை வியாபாரிகள் அருண் ஜி அவர்களிடம் "மீண்டும் எப்போது இங்கு வந்து பாடுவீர்கள்?" என அன்புடன் விசாரித்தனர். (அருண் ஜி சிரிப்பையே பதிலாக தந்தார் என்பது வேறு விஷயம்)
l
பிருந்தாவன் - இல் அருண் ஜி முதல் நாள் பாடிய "சோட்டி சோட்டி" என தொடங்ம் ஹிந்தி பாடலுக்கு அரங்கமே எழுந்து நடனமாடியது. தொடர்ந்து வந்த, 'சங்கராபரணம்' ராகத்தில் அமைந்த Qawwali பஜன் இன்னும் என் காதில் ஒலிக்கிறது. தென் இந்தியாவில் கவ்வாலி பஜன் மிக அபூர்வம். வட இந்தியாவில் கவ்வாலி -இல் "அச்ஹுதம் கேசவம்" பாடியது அதை விட அபூர்வம்.
கிருஷ்ணர் பிறந்து, விளையாடிய மண்ணில் நாமும் விழுந்து புரண்டு விளையாடலாம் என நினைத்து சென்ற எங்களின் மேல் பிருந்தாவன் மண் விழுந்து புரண்டு விளையாடியது; ஒரே ஆட்டோவில் 19 பேர் பயணித்தது; மிகுந்த ஏழ்மையில் இருந்தும் தாராளமாய் சிரித்த சிறுவர்களின் முகம்; அனைத்து கோயில்களிலும் இடை விடாது நடைபெற்ற 'ராதே கிருஷ்ணா' பஜன்; 'பர்சானா' செல்லும் வழியில் ஒரு வெள்ளை குதிரையை பார்த்து அருண் ஜி 'நீ ராதே தானே?' என்ற கேட்ட போது ஆம் என்று ஆடிய குதிரையின் தலை;..................... அனுபவங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்த முகாமின் போது, 'சுவாமி சுதந்த்ரானந்தா' ஆற்றிய உரை..............ஹிந்திதெரியாத நான் மற்றவர்களோடு சேர்ந்து சிரித்தேன்; கை தட்டினேன். உண்மையில் ஒன்றும் புரியவில்லை. நான் சென்னை திரும்பிய போது அவரது உரையின் தமிழாக்கம் அறிந்தேன். அவரது உரை ஒரு போனஸ் என்பதில் சந்தேகமில்லை.
வழக்கமாக அருண் ஜி ராமரை பற்றி பேசினாலே வானரங்கள் அரங்கத்தில் நுழையும். இதை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். பிருந்தாவன் - இல் "யோக வசிஷ்டா" விளக்கவுரை! கேட்கவா வேண்டும்? ஆனால் வானரங்கள் உள்ளே வர வழியே இல்லாமல் ஓர் ஏற்பாடு. என்ன நடந்தது? "யோக வசிஷ்டா" - முடிந்தவுடன் வானரத்திற்கு பதிலாக வருணரே வந்தார். சுமார் 100 நிமிடம் கன மழை நம்மை வாழ்த்தி சென்றது.
பல்வேறு விதமான ஞானமும், அறிவுரைகளும், அனுபவங்களும் கிடைத்த ஓர் இனிய பயணம் இது. பிருந்தாவன் இல் இருந்து கிளம்பும் முன் எங்களது சமையல் வேலைகளை கவனித்த வட இந்தியரிடம் சென்று நான், 'நீங்கள் இங்கு வந்ததில் என்ன கற்று கொண்டீர்கள்?' என வினவினேன். 'வெண் பொங்கல், அவல் உப்புமா, தயிர் சாதம்' என்றார். மேலும், 'உங்கள் ஆசிரியர் அருண் ஜி; எங்கள் ஆசிரியர் சித்ரா- அம்மா' என குறும்பாக சிரித்தார்.
ராதே ராதே
அன்புடன்
இரவிச்சந்திரன் முத்து தீஷதர்
94449 04644