Wednesday, May 4, 2011

A salubrious experience

Promised as a retreat, the amc at Kodai was indeed a blissful withdrawal for prayer, study and meditation; The salubrious weather of the hill town was a blessing to all participants to go through the sessions tirelessly. Lessons from Yoga Vasishta , walks alongside beautiful lakes and parks were delightful.
Click the photo to have an enlarged view

கோடையில் ஒரு குதூகலம்
 
'கோடை' யில் ஒரு முதுநிலைப் பயிற்சி முகாம் என்றவுடன், வெயிலைத்தான் குறுப்பிடுகிறார்களோ என நினைத்தேன்.  பிறகுதான் 'கொடைக்கானல்' என புரிந்தது.  சுமார் 100 பேர் பங்கு பெற்ற இந்த முகாமின் சிறப்பம்சம்..........இது நடை பெற்றது தேவாலயத்திற்கு சொந்தமான ஓர்  இடத்தில!!
 
அருண்ஜி, அசோகன்ஜி, அன்பு ஒரு AAA ஆகவும், முகாமிற்கு ஏற்பாடுகளை  செய்திருந்த 'RBR' சண்முகம், சுந்தர் மற்றும் இரவிச்சந்திரன் +++ ஆகவும் இணைந்து ஒரு 'AAA+++' நிகழ்ச்சியை அளித்ததாக கூறினார் சென்னையிலிருந்து வந்திருந்த திருமதி மீனாக்ஷி அவர்கள்.  நீண்ட இடைவெளிக்குப்பின் முற்றிலும் தமிழ் பாடல்கள் (குறிப்பாக முருகன் பாடல்கள்)  அடங்கிய சத்சங்கம் வழங்கிய அருண்ஜியை பார்த்த போது எனக்கு திரு. 'பித்துக்குளி' முருகதாஸ்  அவர்களின் நினைவுதான் வந்தது. பாடலோடு,  பக்தியை வழங்கும் கலை ஒரு சிலரிடம்தான் உள்ளது.  அதில் அருண்ஜியும் ஒருவர்.   சனிக்கிழமையன்று சத்சங் ஆரம்பித்தவுடன் தொடங்கிய மழை, சரியாக 'ராதா ரமண ஹரி ஓம்' பாடும் போது ஓய்ந்தது என்னுள் ஓர் ஆச்சரியத்தை உண்டாக்கியது. 
 
'யோகா வசிஷ்டா' விளக்கவுரைக்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு வரவேற்பு.  முகாமில் பங்கு பெற்ற பலர் யோகா வசிஷ்ட புஸ்தகம் தமிழில் கிடைக்குமா என விசாரித்தனர்.  (என்னிடம் உள்ளது; தொடர்பு கொள்ளலாம்).  சனிக்கிழமையன்று  குறிஞ்சி முருகன் கோயிலுக்கு அனைவரும் விஜயம் செய்தோம். 
 
 சுமார் 27 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த, முகாம் நடை பெற்ற இடத்தில், பல காட்டெருமைகளை காண முடிந்தது.  சிகப்பு நிறத்தை கண்டால் எருமை துரத்தும்  என உள்ளூர் மக்கள் எங்களை எச்சரித்தனர்.  ஆனால், அவை 'பூனை' போல் எங்களை கண்டதும் வழி விட்டது என்னுள் சிரிப்பை வரவழைத்தது.
 
அரை மனதுடன் புறப்பட தயாரான எங்களை, CSI - யின் இயக்குனர் திரு. பால் அவர்கள் வழி அனுப்பி வைத்தார்.  எம்மதமும் போதிப்பது 'அன்பு' என்ற மந்திரத்தைத்தான் என குறுப்பிட்ட திரு பால் அவர்கள், தேவாலயத்துக்கு அடிக்கடி வரும் படி அன்பு வேண்டுகோள் விடுத்தார். 
 
குளிரிடமிருந்து விடை பெற்று சென்னை வந்த எங்களைவெயிலும், வேர்வையும் வரவேற்றது.  'வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை' என அருண்ஜி பல முறை கூறியது நினைவிற்கு வந்தது.  வெயில் மட்டும் நிரந்தரமா என்ன?  அனுபவித்துதான் பார்ப்போமே என எனக்குள் நானே கூறிக்கொண்டு வீடு சேர்ந்தேன்.  என்னை வரவேற்ற என் சகோதரி கேட்டாள், 'அடுத்த AMC எங்கே என்று?'.   
 
அன்புடன்,
இரவிச்சந்திரன் முத்து தீஷதர்
94449 04644

1 comment:

  1. After going thru' the experience sharing of my good friend ravi about the kodaikanal amc, i feel very horrible and bad for having missed the golden opportunity. AMC with our beloved SHRI.ARUNJI is an everlasing experince and it has always been a great one-r.aravindan

    ReplyDelete